6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாஸ்டர் படம் ரிலீஸ் எப்போது? இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படம் ரிலீஷ் எப்போது? என்கிற விஜய் ரசிகரின் கேள்விக்கு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 6:22 am

DIN

மாஸ்டர் படம் ரிலீஸ் எப்போது? என்கிற விஜய் ரசிகரின் கேள்விக்கு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

மாநகரம், கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளிவரும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கலில் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘முதலில் உயிர்பிழைப்போம். அப்புறம் கொண்டாடலாம்.’ என்றும், விரைவில் படம் திரைக்கு வரும். அதுவரை பொறுத்திருங்கள்.’ என ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.