
ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
ஏப்ரல் 8 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வமணி பேசியதாவது:
பெப்சி தொழிலாளர்களுக்கு இதுவரை 2 கோடியே 45 லட்சம் நிதியுதவி வந்துள்ளது. 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக வந்துள்ளன.
25,000 பேர் உள்ள எங்கள் அமைப்பில் இதுவரை 16,000 பேருக்குச் சிறிது சிறிதாக உதவியுள்ளோம். தினமும் 100 பேரை வரவைத்து மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை வழங்குகிறோம். ஆயிரம் ரூபாய்க்கான ஒரு மூட்டை அரிசியும் (25 கிலோ) அத்தியாவசியமான பொருள்களை வாங்க ரூ. 500-ம் வழங்குகிறோம். இன்னும் 9,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது. 25,000 பேருக்கும் இதுபோன்று உதவி செய்யவேண்டும் என்றால் எங்களுக்கு ரூ. 3.75 கோடி தேவைப்படுகிறது. நாங்கள் யாரிடமும் நேரடியாகச் சென்று உதவி கேட்கவில்லை. உதவ வேண்டும் என்கிற மனத்தை எதிர்பார்க்கிறோம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.