சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடகர், கரோனா வைரஸ் தொற்றால் மரணம்

கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடகரான டிராய் ஸ்னீட், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 52.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 10:42 am

DIN

கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடகரான டிராய் ஸ்னீட், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 52.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 29,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடகரான டிராய் ஸ்னீட், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டிராய், பிளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டிராயின் மக்கள் தொடர்பாளர் பில் கார்பென்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1999-ல் வெளியான ஹையர் ஆல்பத்துக்காக கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் டிராய் ஸ்னீட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.