கரண் ஜோஹரிடமிருந்து பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும்: நடிகை கங்கனா கோரிக்கை
கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.


பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘குஞ்ஜன் சக்சேனா: தி காா்கில் கோ்ல்’ என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூா் இப்படத்தில் நடித்துள்ளாா். பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்திய விமானப் படையினரை தவறாக சித்தரித்துள்ளது என்றும், அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய திரைப்பட கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் குஞ்ஜன் சக்சேனா படத்தை முன்வைத்து கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
கரண் ஜோஹருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திரைத்துறையிலிருந்து நான் வெளியேற வேண்டும் எனப் பொதுவெளியில் வெளிப்படையாகக் கூறினார். சுசாந்த் சிங் திரை வாழ்க்கையில் சதித்திட்டம் தீட்டினார். ஊரி போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தார். இப்போது நம் ராணுவத்துக்கு எதிரான படத்தைத் (குஞ்ஜன் சக்சேனா) தயாரித்துள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...