தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாடகர் எஸ்.பி.பி.க்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது: எஸ்.பி. சரண்

பாடகர் எஸ்.பி.பிக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண்...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 11:23 am

DIN

பாடகர் எஸ்.பி.பிக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டாா். செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பயனாக எஸ்.பி.பி.யின் உடல்நிலை சற்று சீரடைந்ததாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவா் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று தெரிவித்தது. அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தகவல் தெரிவித்ததாவது:

நேற்றைய நிலையே இன்றும் தொடர்கிறது. செயற்கை சுவாசம் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படவில்லை என்கிற வதந்தி பரவியுள்ளது. அது உண்மையல்ல. அது விரைவில் நடக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். அவருக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கும் அவருக்கும் உதவுகின்றன. எனவே தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.