டிக்கெட் விலையை விடவும் பாப்கார்ன் விலை அதிகம்: சூரரைப் போற்று - ஓடிடி சர்ச்சையில் பாரதிராஜா அறிக்கை
சூரரைப் போற்று - ஓடிடி விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்...


சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா கடந்த வாரம் வெளியிட்டார். சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஹரி சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சூரரைப் போற்று - ஓடிடி விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. சூரரைப் போற்று - ஓடிடி விவகாரம் பற்றி அவர் கூறியுள்ளதாவது:

பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த மாற்று வழி தான் ஓடிடி. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுபோன்ற மாற்று தளங்களைத் தவிர்க்க முடியாது.
திரையரங்குக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்னை, திரையரங்கு டிக்கெட் விலையை விடவும் பாப்கார்ன், பார்க்கிங் விலை அதிகம். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்துக் குடும்பத்தோடு திரையரங்குக்கு வர முடியும்?
ஓடிடிக்கு எதிரான பிரச்னையை சூர்யாவுக்கு எதிரான தனிநபர் பிரச்னையாகத் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இதற்குப் பின்னணியில் உள்ள அரசியலை நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள். எந்தவொரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனிநபர் தாக்குதல் வேண்டாம். கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கிற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியதாகும். சூரரைப் போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சூரரைப் போற்று முத்திரை பதிக்கும்; தமிழனைப் போற்றும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...