விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் பிக் பாஸ் சம்யுக்தா!
விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிக் பாஸ் சம்யுக்தா.


விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிக் பாஸ் சம்யுக்தா.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மாடல் சம்யுக்தா, கடந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேறினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் சம்யுக்தா இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கி வரும் படம் - துக்ளக் தர்பார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா.
இப்படத்தில் தான் நடிப்பதாக பிக் பாஸ் சம்யுக்தா, இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சம்யுக்தா மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...