சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிரஞ்சீவி படத்தை இயக்குகிறார் மோகன் ராஜா: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் மோகன் ராஜா.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

DIN

ஜெயம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. எடிட்டர் மோகனின் மூத்த மகன், நடிகர் ஜெயம் ரவியின் சகோதரர்.

2015-ல் இவர் இயக்கிய தனி ஒருவன் பெரிய வெற்றியை அடைந்தது. கடைசியாக, மோகன் ராஜா இயக்கத்தில் 2017-ல் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வெளிவந்தது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் மோகன் ராஜா. இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

என்னுடைய பெற்றோர் மற்றும் ரசிகர்களின் ஆசிர்வாதங்களுடன் வாழ்க்கை எனக்கு சிறந்ததையே தந்துள்ளது. இந்தமுறை மெகாஸ்டார் சிரஞ்சீவியை வைத்து ஒரு பெரிய இடத்தை இயக்குகிறேன். உங்களுடைய வாழ்த்துகள் எனக்குத் தேவை. சிரஞ்சீவி 153, அவருடனான 2-வது படம். 1997-ல் பெரிய வெற்றியை அடைந்த ஹிட்லர் படத்தை என் தந்தை மோகன் தயாரித்தார். 2001-ல் ஹனுமன் ஜங்க்‌ஷன் படத்தில் அறிமுகமான பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தை இயக்கிறேன் என்றார். 

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் தற்போது நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது அவருடைய 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. இது அவருடைய 152-வது படம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.