பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அப்துல் காலிக், எஸ்.ஜே. சூர்யா...: தொடரும் மாநாடு படப் புதிய தகவல்கள்

மாநாடு படத்தின் தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி, சமீபத்திய தகவல்கள் இவை...

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 10:16 am

மாநாடு படத்தின் தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி, சமீபத்திய தகவல்கள் இவை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் கூடுதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் 2018-ம் வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு 2019 ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். 

இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

திடீர் திருப்பமாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்தார். படப்பிடிப்புக்குச் சரியாக வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது.

மாநாடு படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார் சிம்பு. 

இந்நிலையில் மாநாடு தொடர்பான இரு புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞராக இப்படத்தில் நடிக்கிறார் சிம்பு. 

எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மாநாடு படத்தில் நடிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.