பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பொங்கல் விழாவையொட்டி மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டர் நேற்று வெளியானது.
போஸ்டர் அசத்தலாக இருந்தாலும் இந்த மாஸ்டர் பட போஸ்டர் ஏற்கெனவே வந்த சில படங்களின் போஸ்டர்களைப் பிரதிபலிப்பதாகச் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.
இதற்கு முன்பு மாஸ்டர் படத்தின் கதை, சைலன்ஸ்டு என்கிற கொரியப் படத்தின் தழுவலாக இருக்கிற வாய்ப்பு உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் பட போஸ்டரும் இதேபோன்றதொரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


