புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மே 1 அன்று வெளியாகவுள்ள ஜெயம் ரவியின் பூமி!

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் - பூமி.

News image
Updated On :18 ஜனவரி 2020, 11:53 am

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். 

பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். 

பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூமி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படம் மே 1 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.