ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிஷி ரிச்சர்ட் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளதால் திரெளபதி படத்துக்கு அஜித் ஆதரவளிக்கிறாரா என்று வார இதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் மோகன் ஜி ட்விட்டரில் தெரிவித்ததாவது:
எங்கள் படத்திற்கும் தல அவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. நான் அவர் ரசிகன், கதாநாயகன் அவர் உறவு என்பதால் மட்டுமே தல பெயரைப் பயன்படுத்துவது தவறான செயல். இந்த படம் என் எழுத்து, என் உரிமை. இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வாழுங்கள், வாழ விடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜனவரி 13 அன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்ததாவது:
வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


