பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அமேசான் நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி!

அமேசான் நிறுவனத்துடன் இரு வருட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா.

News image
Updated On :1 ஜூலை 2020, 12:04 pm

DIN

அமேசான் நிறுவனத்துடன் இரு வருட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா.

அமேசான் நிறுவனம் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் பிரியங்கா சோப்ரா கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அமேசான், பிரியங்கா சோப்ரா என இரு தரப்பும் உறுதி செய்துள்ளது.

அமேசான் நிறுவனத்துக்கு உலக அளவில் வீச்சு உள்ளது. இதனால் அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக உள்ளேன். உலக அளவிலான ஒப்பந்தம் என்பதால் என்னால் இப்போது ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வேறு எந்த மொழியிலும் பணியாற்ற முடியும் என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமேசான் நிறுவனத்துடன் இணைந்து நடன நிகழ்ச்சி, ஓர் இணையத் தொடர் என இரு திட்டங்களில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது உலக அளவிலான ஒப்பந்தம் என்பதால் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் தொடரைத் தயாரிக்க முடியும். 

2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.