மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஆச்சர்யப்படுத்தும் இசைத்திறமை: ஏ.ஆர். ரஹ்மானின் பாராட்டைப் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி சஹானா!

சென்னையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான சஹானாவின் இசைத்திறமையை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

News image
Updated On :3 ஜூலை 2020, 6:44 am

DIN

சென்னையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான சஹானாவின் இசைத்திறமையை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

10 வயது சஹானா இசையில் பல சாதனைகளைப் படைத்து பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறார். பிறந்தபோதே பார்வையில்லாமல் பிறந்தவர் சஹானா. அவருடைய பெற்றோர் பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சஹானாவின் தந்தை சென்னையைச் சேர்ந்தவர். அம்மாவுக்கு இலங்கை. ஒலியால் மட்டும் உலகத்தை சஹானாவால் பார்க்க முடியும் என்பதால் இசையின் மீது அவருடைய கவனத்தைத் திருப்பினார்கள். 4 வயது முதல் முறைப்படி பியானோ கற்று வருகிறார். அருமையாகப் பாடவும் செய்வார்.

தன்னுடைய இசைத்திறமையால் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறார் சஹானா. இதனால் பல மேடைக் கச்சேரிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ஒரே நேரத்தில் இரு கீ போர்டுகளை இசையமைத்து அசத்தும் சஹானா, ஒரே நேரத்தில் இரு கீ போர்டுகளில் இரு வேறு பாடல்களுக்கும் இசையமைத்தும் ஆச்சர்யப்படுத்துகிறார். ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சஹாவின் சாதனை இடம்பெற்றுள்ளது. எந்தப் பாடலையும் மூன்று நான்கு முறை கேட்டாலே உடனே அதை நோட்ஸ் எடுத்து வாசிக்கும் அளவுக்குத் திறமைசாலியாக உள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் வெளியானது. இப்பாடலை கீ போர்டில் வாசித்து அதன் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் சஹானா. இதைப் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான், சஹானாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். கோப்ரா தயாரிப்பாளர் லலித் குமார், சஹானாவின் திறமையைப் பாராட்டி ஆடியோ சிஸ்டம் தொடர்பான பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.