மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

பிரபல கலைஞர்களுடன் இணைந்து சுசாந்த் சிங்குக்கு இசை அஞ்சலி செலுத்தும் ஏ.ஆர். ரஹ்மான்

மறைந்த நடிகர் சுசாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட...

News image
Updated On :21 ஜூலை 2020, 12:10 pm

DIN

மறைந்த நடிகர் சுசாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் சுசாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொள்கிறார். ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் செளகான், ஹிரிடே கட்டானி, சுனிதி செளகான், ஷாஷா திருபதி, ஜொனிடா காந்தி போன்ற பிரபல இசைக்கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். நாளை (ஜூலை 22) இந்திய நேரம் மதியம் 12 மணி முதல் இந்நிகழ்ச்சியை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.