மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

கரோனா வைரஸிலிருந்து தான் குணமாகி விட்டதாக வெளியான செய்திகளுக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் கடந்த வெள்ளி இரவு ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் கரோனா இல்லை என முடிவு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இச்செய்திக்கு அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தவறானது என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.