இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நடிகர் அனில் முரளி காலமானார்

அனில் முரளியின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

News image
Updated On :30 ஜூலை 2020, 8:13 am

DIN

பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனில் முரளி இன்று காலமானார். அவருக்கு வயது 56.

தனி ஒருவன், 6, கொடி, நாடோடிகள் 2, மிஸ்டர் லோக்கல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அனில் முரளி கேரளாவைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். பிறகு 1993 முதல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

கல்லீரல் பிரச்னைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமாகியுள்ளார். 

அனில் முரளியின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.