/

மார்ச் 6 அன்று வெளியாகவுள்ள தமிழ்ப் படங்களும் அவற்றின் டிரெய்லர்களும்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்துக்கு வார இறுதியில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :5 மார்ச் 2020, 9:06 am

நாளை (மார்ச் 6) ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

கடந்த சில வாரங்களாக ஓ மை கடவுளே, திரெளபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற சிறிய படங்கள் மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதால் இதர சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜிப்ஸி, வெல்வெட் நகரம், (எட்டு திக்கும்) பற, இந்த நிலை மாறும், காலேஜ் குமார், ஈவர் கரவாது ஆகிய ஆறு படங்கள் நாளை வெளிவரவுள்ளன. பிரபுதேவா நடிப்பில் உருவான பொன் மாணிக்கவேல் படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால் அப்படத்தின் வெளியீடு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்துக்கு வார இறுதியில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலேஜ் குமார்

ஈவர் கரவாது

ஜிப்ஸி

(எட்டு திக்கும்) பற

இந்த நிலை மாறும்

வெல்வெட் நகரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.