சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நான் தவறவிட்ட பெரிய படங்கள்: நடிகர் ஸ்ரீகாந்த் வருத்தம்

காதல் வைரஸ் படத்தில் அறிமுகமாக இருந்தேன். அதற்காக ஒருவருடம் பயிற்சியெடுத்தேன்.

News image
Updated On :11 மார்ச் 2020, 5:39 am

நடிகர் ஸ்ரீகாந்த், தன்னுடைய 18 வருட திரை வாழ்க்கை குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

தமிழ் சினிமாவில் என்னை விடவும் இன்னொரு நடிகர் நான் சந்தித்த பிரச்னைகள், விபத்துகள், தடைகளைச் சந்தித்திருக்க மாட்டார். இதற்குப் பிறகும் நான் திரையுலகில் இருப்பதற்குக் காரணம் கடவுளும் ரசிகர்களும் தாம்.

காதல் வைரஸ் படத்தில் அறிமுகமாக இருந்தேன். அதற்காக ஒருவருடம் பயிற்சியெடுத்தேன். ஆனால் திடீரென ஒருநாளில் அப்படத்திலிருந்து விலக்கப்பட்டேன். நான் நொறுங்கிப் போனேன். பாரதிராஜா சாரால் நான் அறிமுகமாக இருந்தேன். கே. பாலசந்தர் சாராலும் அறிமுகமாவதற்குத் திட்டம் இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. 

12 பி படம் நான் முதலில் நடிக்கவேண்டியது. ரோஜா கூட்டம் படத்திலும் என் நண்பரின் பங்கு உள்ளது. திடீரென அவர் விலகிவிட்டார். பிறகுதான் சசி சாரால் நான் அறிமுகமானேன். சினிமா என்பது வட்டம். உங்களுக்கானதை நீங்கள் அடைவீர்கள். முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.