ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மனிதனைக் காப்பாற்ற கடவுள் வரமாட்டார்: நடிகர் விஜய் சேதுபதி

மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

News image
புகைப்படம்: ட்விட்டர் | எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்
Updated On :15 மார்ச் 2020, 5:08 pm

DIN


மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, 

"மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே எந்த மதமும் கிடையாது. தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதர் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.