நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா?: நடிகர் ராதாரவி விளக்கம்

கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு...

News image
Updated On :13 மே 2020, 10:24 am

DIN

சென்னையிலிருந்து கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குக் குடும்பத்துடன் சென்றார் ராதாரவி. அனுமதி பெற்று வந்திருந்தாலும் கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி எம்.கைகாட்டியில் உள்ள வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடையாள வில்லையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது பங்களாவின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதாரவியின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் ராதாரவி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.