கடன் தொல்லையால் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை

கடன் தொல்லையால் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: கடன் தொல்லையால் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்தவர் மன்மீத் கிரேவால் (32). தொலைக்காட்சி நடிகரான இவர் “ஆதத் சே மஜ்பூர் “ என்னும் நகைச்சவை தொலைகாட்சித் நடித்து பிரபலமானவர், மும்பையில் தனது மனைவியுடன் கார்கர் நகரில் மன்மீத் வசித்து வந்தார். கரோனாவிற்கு முன்பிருந்தே பெரிய வாய்ப்புகள் இன்றி அவர் சிரமப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.  

இந்நிலையில் மும்பையில் தனது இல்லத்தில் படுக்கையறை சீலிங் பேனில் துப்பட்டாவில் தூக்கிட்டு சனியன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை முதலில் இதைக் கண்ட அவரது மனைவி உதவி கோரி கூச்சலிட்ட போதும், மன்மீத்திற்கு கரோனா தொற்றியிருக்கக் கூடும் என்று அஞ்சி பக்கத்துக்கு வீட்டார் யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் அங்கிருந்த வீட்டுக் காவலாளி ஒருவரின் உதவியுடன் துப்பட்டாவைத் துண்டித்து மன்மீத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாரதா விபத்தினால் மரணம் என்று வழக்குப் பதிந்துள்ள கார்கர் பகுதி காவல்துறையினர், தனது வீட்டுக்கு வாடகையான ரூ. 8500-ஐ கூட கொடுக்க இயலாத அளவிற்கு மன்மீத் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.   

இந்த சம்பவம் மும்பை தொலைக்காட்சி வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com