அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சந்திரமுகி 2 படத்தில் நடிக்கிறேனா?: நடிகை ஜோதிகா பதில்

நீங்கள் நடிக்கவில்லை என்றால் வேறு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற கேள்விக்கு...

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:40 pm

DIN

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் - சந்திரமுகி. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.

என்னுடைய அடுத்த படம், ரஜினி சாரின் சந்திரமுகி 2. அவருடைய சம்மதத்துடன் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று கடந்த மாதம் அறிவித்தார் ராகவா லாரன்ஸ். சன் டிவி தயாரிக்கும் இந்தப் படத்தை பி.வாசு இயக்குகிறார். 2017-ல் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார் பி.வாசு. அதன்பிறகு அவர் இயக்கும் தமிழ்ப்படம் இது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் குறித்து ஜோதிகா ஒரு பேட்டியில் கூறியதாவது:

சந்திரமுகி 2 படத்தில் நான் நடிக்கிறேனா எனக் கேட்கிறீர்கள். சந்திரமுகி 2 படத்தில் நான் நடிக்கவில்லை என நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு தகவலும் இல்லை. அந்தப் படத்தில் நான் நடிக்கவேண்டும் என யாரும் கேட்கவில்லை என்றார்.

நீங்கள் நடிக்கவில்லை என்றால் வேறு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற கேள்விக்கு ஜோதிகா அளித்த பதில்: சந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.