முதல் சந்திப்பு புகைப்படங்களைப் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனாஸ்
இரு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் சந்திப்பு காதலாக மலர்ந்து, பிறகு திருமணத்தில் முடிந்தது...


இரு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் சந்திப்பு காதலாக மலர்ந்து, பிறகு திருமணத்தில் முடிந்தது.
2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படியும் ஹிந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் இரு வருடங்களுக்கு முன்பு முதல்முறையாகச் சந்தித்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த நாள் முதல் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்துள்ளீர்கள் என்று பிரியங்காவும் என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை என்று நிக் ஜோனாஸும் உருக்கமாகப் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...