பா. இரஞ்சித் படம்: ஆர்யா புதிய தகவல்!
இதைவிடவும் சிறந்த விளையாட்டுப் படத்தை என்னால் எதிர்பார்க்க முடியாது.


இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. பா. இரஞ்சித்தின் படத்தில் குத்துச்சண்டை வீரர்களுடன் மோத தயாராக உள்ளேன். என் திரை வாழ்க்கையில் இது மிகவும் சவாலான படம் என்று கடந்த பிப்ரவரி மாதம் தகவல் அளித்தார் ஆர்யா. இப்படத்துக்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து வலுவாக்கியுள்ள தனது உடற்கட்டு குறித்த விடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இந்தப் படம் பற்றி ஆர்யா ட்வீட் வெளியிட்டுள்ளதாவது:
இந்த அருமையான படத்தை வழங்கியதற்கு நன்றி பா. இரஞ்சித். இதைவிடவும் சிறந்த விளையாட்டுப் படத்தை என்னால் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அற்புதமான இயக்குநர். முரளி சார் எங்களை விடவும் நீங்கள் அதிவேகமாக உள்ளீர்கள். விஷுவல் விருந்துக்கு நன்றி. தயாரிப்பாளர் கே9ஸ்டூடியோஸ் இல்லாவிட்டால் இந்தப் படம் இல்லை. விரைவில் முதல் தோற்ற போஸ்டர் என எழுதி தன்னுடைய நடித்த நடிகர்களையும் பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...