47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விமர்சனங்களால் முடிவை மாற்றிக் கொண்ட பிக் பாஸ்: தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்று கட்டளை!

ஷ்யூர் பிக் பாஸ். ஐ வில் டேக் கேர். (சிரித்துவிட்டு)...

News image
Updated On :6 நவம்பர் 2020, 7:18 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் மட்டும் தான் பேசவேண்டும் என்று போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கட்டளை விதித்துள்ளார். 

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏதோ அயல்நாட்டுப் படத்தைப் பார்ப்பது போல சப் டைட்டிலுடன் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டார்கள் போட்டியாளர்களும் விஜய் தொலைக்காட்சியும்.

ஆரம்ப சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேசினாலே தண்டனை உண்டு. இதற்காக நீச்சல் குளத்தில் போட்டியாளர்களைத் தள்ளும் காட்சிகளையெல்லாம் ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். இதனால் போட்டியாளர்களும் கவனமாக ஆங்கிலத்தில் உரையாடாமல் தமிழில் உரையாட மெனக்கெடுவார்கள். 

ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை சப்டைட்டிலுடன் பார்க்கவைத்து விட்டார்கள். பாலா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, அர்ச்சனா, கேப்ரியலா, சுசித்ரா எனப் பலரும் சக போட்டியாளர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதையே விரும்புகிறார்கள். இதனால் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் தமிழில் சப்டைட்டில் போடும் அவலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தினமணி டாட் காமில் கட்டுரை ஒன்றும் எழுதப்பட்டது.

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது பிக் பாஸ் நிர்வாகம். போட்டியாளர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வார கேப்டனான சம்யுக்தாவிடம் இதுபற்றி எடுத்துரைத்தார் பிக் பாஸ். அப்போது நிகழ்ந்த உரையாடல்:

பிக் பாஸ்: இந்த வீட்டில் தமிழில் மட்டும்தான் பேசவேண்டும் என்பது முக்கியமான விதிமுறை. நீங்களும் முழு நீள ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். வீட்டின் தலைவர் என்கிற முறையில் எல்லோருக்கும் தெளிவுபடுத்தி மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சம்யுக்தா: ஷ்யூர் பிக் பாஸ். ஐ வில் டேக் கேர். (சிரித்துவிட்டு) ஆங்கிலத்தில் பேசாம பார்த்துக்கறேன்.

பிறகு, போட்டியாளர்களிடம் வந்து இந்தத் தகவலைத் தெரிவித்தார் சம்யுக்தா. நான் நினைக்கிறேன், சுச்சி, அர்ச்சனா, எனக்காக இந்த மெசேஜ். இனிமேல் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்றவர் கண்டினியூ, செண்டன்ஸ் ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்னவென்று சொல்லவேண்டும் என ஆஜீத்திடம் கேட்டுக்கொண்டார். 

எனினும் இந்த விதிமுறையை போட்டியாளர்கள் எந்தளவுக்குத் தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. சம்யுக்தா, ஷிவானி, பாலாஜி ஆகியோர் இதைவைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆங்கிலத்தில் பேசினால் என்ன தண்டனை கிடைக்கும் என்று பிக் பாஸும் சொல்லாததால் இந்த விதிமுறையைப் போட்டியாளர்கள் எப்படிப் பின்பற்றப் போகிறார்கள், பிக் பாஸ் கட்டளைக்கு மதிப்பளிப்பார்களா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியும். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.