புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியது மாநாடு படப்பிடிப்பு: சிம்பு பங்கேற்பு!
சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது.


சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் சிம்பு பங்கேற்றுள்ளார். இதுபற்றிய புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் அடுத்தடுத்து இரு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் சிம்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...