நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா!

நானிக்கு ஜோடியாகத் தெலுங்குப் படத்தில் நடிக்க முதல்முறையாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை நஸ்ரியா.

News image

படம் - facebook.com/Nazriya4u

Updated On :13 நவம்பர் 2020, 10:41 am

DIN

நானிக்கு ஜோடியாகத் தெலுங்குப் படத்தில் நடிக்க முதல்முறையாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை நஸ்ரியா.

2013 முதல் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 2014-ல் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்தார். 

திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இணைந்து டிரான்ஸ் படத்தில் நடித்தார் நஸ்ரியா. 

இந்நிலையில் இதுவரை தெலுங்குப் படத்தில் நடிக்காத நஸ்ரியா, முதல்முறையாக நானிக்கு ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கும் இப்படத்தின் தலைப்பு, நவம்பர் 21 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.