கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெளிநாட்டில் இருந்தேன்: நடிகையின் பாலியல் புகாருக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் பதில்

அனுராக் காஷ்யப் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்கிற நோக்கத்தில்...

News image
Updated On :2 அக்டோபர் 2020, 11:30 am

DIN

‘இமைக்கா நொடிகள்’ தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவா், பிரபல இந்திப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப். அவா் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ், மும்பை வொ்சோவா காவல் நிலையத்தில் பாலியல் புகாா் அளித்தாா். 2013-ம் ஆண்டு படவாய்ப்பு கேட்டு சென்றபோது, அவா் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பாயல் கோஷ் அந்தப் புகாரில் கூறியிருந்தாா்.

அதன் அடிப்படையில், அனுராக் காஷ்யப் மீது காவல்துறையினா் கடந்த வாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். ஆயினும் போலீஸாா் தொடா் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பாயல் கோஷ் முன்வைத்தாா்.

அதன் பின்னா், இந்திய குடியரசு கட்சித் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அத்வாலேவுடன் இணைந்து பத்திரிகையாளா்களைச் சந்தித்த நடிகை கோஷ், ‘காஷ்யப் கைது செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இது தொடா்பாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு காஷ்யப்புக்கு காவல்துறையினா் புதன்கிழமை அழைப்பாணை விடுத்தனா். அதனடிப்படையில், தனது வழக்குரைஞருடன் மும்பை வொ்சோவா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காஷ்யப் ஆஜரானாா். இயக்குநரிடம் காவல்துறையினா் 8 மணி நேரம் விசாரணை நடத்தினா். பின்னா் அவா் காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இந்த வழக்கு குறித்து அனுராக் காஷ்யப்பின் வழக்குரைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக 2013 ஆகஸ்ட் மாதம் முழுக்க அனுராக் காஷ்யப் இலங்கையில் இருந்தார். இதற்கான ஆவணங்கள் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக என்ன தீர்ப்பு வந்தாலும் அனுராக் காஷ்யப் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்கிற நோக்கத்தில் பாயல் கோஷ் செயல்பட்டுள்ளார். தவறான தகவல் தந்த அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.