கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐந்து இயக்குநர்கள் உருவாக்கியுள்ள புத்தம் புதுக் காலை படம்: டிரெய்லர் வெளியானது!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள புத்தம் புதுக் காலை படத்தின் டிரெய்லரை...

News image
Updated On :5 அக்டோபர் 2020, 8:22 am

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள புத்தம் புதுக் காலை படத்தின் டிரெய்லரை மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.

கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் என தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து புத்தம் புதுக் காலை என்கிற படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்காக இயக்கியுள்ளார்கள். 

ஐந்து கதைகள் கொண்ட இந்தப் படம் அக்டோபர் 16 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கரோனா காலத்தில் நடைபெறும் இக்கதைகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. 

இளமை இதோ இதோ என்கிற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜெயராம், காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

அவரும் நானும்/அவளும் நானும் கதையை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரிது வர்மா போன்றோர் நடித்துள்ளார்கள். 

காஃபி எனிஒன் கதையை சுஹாசினி மணி ரத்னம் இயக்கியுள்ளார். சுஹாசினி, அனு ஹாசன், ஷ்ருதி ஹாசன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

ரீயூனியன் கதையை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, லீலா சாம்சன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

மிராகிள் கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, முத்து குமார் போன்றோர் நடித்துள்ளார்கள்.

புத்தம் புதுக் காலை படத்தின் டிரெய்லரை பிரபலங்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.