படப்பிடிப்பில் காயம்: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகர்
பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2012 முதல் மலையாளப் படங்களில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். தமிழில் அபியும் நானும், மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வி.எஸ். ரோஹித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் வயிற்றில் அடி வாங்குவது போல டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இக்காட்சியைப் படமாக்கியபோது டொவினோ தாமஸின் வயிற்றில் காயம் ஏற்பட்டு வலி உண்டாகியிருக்கிறது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார்.
ஆனால் இன்று வயிற்றில் வலி அதிகமாக இருந்ததால் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டொவினோ தாமஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...