கன்னட இயக்குநர் விஜய் ரெட்டி காலமானார்
விஜய் ரெட்டியின் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


பல வெற்றிப் படங்களை அளித்த மூத்த கன்னட இயக்குநர் விஜய் ரெட்டி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவுடன் இருந்த விஜய் ரெட்டி, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார்.
கந்தாடா குடி (Gandhada Gudi), பக்த பிரகலாதா போன்ற பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து பல படங்களை இயக்கியுள்ளார். 1970-ல் தனது முதல் படத்தை இயக்கிய விஜய் ரெட்டி, கடைசியாக 1996-ல் கர்நாடகா சுபுத்ரா என்கிற படத்தை இயக்கினார்.
விஜய் ரெட்டியின் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...