தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி: 800 பட போஸ்டர் வெளியீடு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்தின்...

News image
Updated On :14 அக்டோபர் 2020, 5:20 am

DIN

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விஜய் சேதுபதி முன்பு பேட்டியளித்ததாவது: தமிழ் இனத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர், முரளிதரன். உலகம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்துள்ளார். முரளிதரனாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்தப் படத்தில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளார் முரளிதரன். கிரிக்கெட் தொடர்பான விவரங்களில் எனக்கு ஆலோசனகள் சொல்லவுள்ளார் என்றார். விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் என் வேடத்தில் நடிப்பதைக் கெளரவமாக எண்ணுகிறேன். படப்பிடிப்பு முடியும்வரை இப்படத்துடன் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன் என்று முரளிதரன் கூறினார். 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே - ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.