சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக். 26-இல் சூரரைப் போற்று டிரெய்லர்: முடிவுக்கு வந்தது காத்திருப்பு!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2020, 2:21 pm

DIN


நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான திரைப்படம் என்பதால் இந்திய விமானப் படையிடமிருந்து அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், சூரரைப் போற்றுக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததையடுத்து, தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

டிரெய்லர் 26-ம் தேதி வெளியாகும் என்று சூர்யா  விடியோ மூலம் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.