
தகுந்த நேரத்தில் எனது அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிப்பேன் என்றும், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்றும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க.. ரஜினி பெயரில் பரவிய போலி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.
இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.