நெட்பிளிக்ஸில் வெளியாகும் அட்லி படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
அந்தகாரம் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபகாலமாக இதுபோன்ற அட்டகாசமான...


ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக வெளியிடும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
அந்தகாரம் என்கிற படத்தை அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். முழுப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.
அந்தகாரம் படத்தைப் பார்த்த விஜய்யின் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டி ட்வீட் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
அந்தகாரம் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபகாலமாக இதுபோன்ற அட்டகாசமான படமொன்றைப் பார்க்கவில்லை. விக்னராஜன், உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார்கள். அட்லி, உங்கள் கையில் வெற்றிப் படமொன்று உள்ளது எனக் கூறினார்.
அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நவம்பர் 24 அன்று வெளியாகவுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...