புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பார்: நடிகை கங்கனா சவால்

விமான நிலையம் வந்த பிறகு நேரத்தைக் குறிப்பிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்...

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 10:48 am

DIN

மும்பைக்கு வர வேண்டாம் என்று சொன்ன சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் சவால் விடுத்துள்ளார். 

இதுபற்றி ட்விட்டரில் கங்கனா கூறியதாவது:

மும்பைக்கு நான் வரக்கூடாது எனப் பலர் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இந்த வாரம் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வருவதாக உள்ளேன். மும்பை விமான நிலையம் வந்த பிறகு நேரத்தைக் குறிப்பிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார் என்று கூறியுள்ளார்.

மும்பைக் காவல்துறைக்கு எதிராக கங்கனா ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதை எதிர்த்த சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத், மும்பைக் காவல்துறையை அவமதிக்கும் செயல் இது. அவரை மும்பைக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதையடுத்து தனது மும்பைப் பயணத் திட்டத்தை கங்கனா அறிவித்துள்ளார்.

கங்கனா தனது சொந்த ஊரான மணாலியில் தற்போது வசித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.