புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு

இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:02 am

DIN

பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதால் நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகா் சுசாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிா்ப்பு கிளம்பியது. மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனை கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் சஞ்சய் ரௌத் எழுதினாா். இதையடுத்து, ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று கங்கனா சவால் விடுத்தாா்.

இதையடுத்து, கங்கனாவுக்கு ஆதரவாகவும், சிவசேனை அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி கண்டனம் தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டன. இது மும்பை அரசியல் மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சஞ்சய் ரௌத் இது தொடா்பாக கூறியதாவது: அந்தப் பெண் (கங்கனா) மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனெனில், மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அவா் பேசியுள்ளாா். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்களையும் அவமதிக்கும் செயல். தனது பேச்சுக்காக அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால், அவரை மன்னிப்பது தொடா்பாக யோசித்து முடிவெடுப்போம். ஆமதாபாத் நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசும் துணிவு அவருக்கு உண்டா என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பிரபலங்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப எக்ஸ், ஒய், இசட் பிரிவுகளில் காவல் பாதுகாப்பு வழங்கப்படும். கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வரும் கங்கனாவுக்கு 24 மணி நேரமும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள்.

கங்கனாவின் இல்லத்திலும் அவர் வெளியே செல்லும்போதும் ஒய் பிளஸ் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் 10 அல்லது 11 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.