சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் அனுஷ்கா படம்

56.5% ரசிகர்கள் படத்தை ஓடிடியில் பார்க்க விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்கள்.

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 9:22 am

DIN

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் - நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் சைலன்ஸ் படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

நிசப்தம் படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட், சமீபத்தில் ரசிகர்களிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். நிசப்தம் படத்தைத் திரையரங்கில் பார்க்க ஜனவரி, பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும் என்றால் படத்தை எங்குப் பார்க்க வேண்டும் என விருப்பப்படுவீர்கள் எனக் கேட்டார். இதுதொடர்பாக 56.5% ரசிகர்கள் படத்தை ஓடிடியில் பார்க்க விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்கள். அனைவரையும் திருப்திப்படுத்த முயல்கிறோம். உங்கள் பதில்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று பதில் அளித்தார் கோனா வெங்கட்.

இதையடுத்து சைலன்ஸ் படம் அக்டோபர் 2 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.