புதிய போட்டியாளராக தேர்வாகி, பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார் பாடகி சுசித்ரா.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார்.
அர்ச்சனாவுக்கு அடுத்ததாக வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார் பிரபல பாடகியும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சுசித்ராவால் பரபரப்பும் சுவாரசியமும் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் சீசனிலேயே என்னை அழைத்தார்கள். இப்போதுதான் அதற்குரிய தருணம் வந்துள்ளது. ஒவ்வொரு சீசனை விடவும் தற்போது போட்டி கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது என்று கமலிடம் இந்நிகழ்ச்சி பற்றிய தன் கருத்தை சுசித்ரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் சாா்பில் முஸ்லிம் வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம்- 6 தொகுதி திமுக-3, தவெக-3

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


