ஓடிடியில் நேரடியாகப் படங்களை வெளியிட்டதால் ஃபஹத் ஃபாசிலுக்கு நெருக்கடியா?
இனிமேல் தன்னுடைய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட மாட்டேன் என்றும்...


சமீபத்தில் ஃபஹத் பாசிலின் மூன்று படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானதால் அவருக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை என கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் - வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த சி யூ சூன், ஜோஜி, இருள் என மூன்று படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. சி யு சூன், ஜோஜி ஆகிய படங்கள் அமேசான் பிரைமிலும் இருள் நெட்பிளிக்ஸிலும் வெளியாகின.
இனிமேல் ஃபஹத் ஃபாசிலின் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானால் அவருடைய படங்களைத் திரையரங்குகளில் திரையிட முடியாது என கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மே 13 அன்று ஃபஹத் ஃபாசில் நடித்த மாலிக் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஃபஹத் ஃபாசிலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை கேரளத் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுபற்றி அவர்கள் தரப்பு கூறியுள்ளதாவது:
ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு முன்பே இதற்கான காரணங்கள் குறித்து எங்களிடம் ஃபஹத் ஃபாசில் விளக்கினார். அதேபோல இனிமேல் தன்னுடைய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான மோகன் லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாது என கேரள ஃபிலிம் சேம்பர் அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...