நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை
மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விவேக்குக்குத் தற்போது எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் இதயச் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...