6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஜித்தை விடியோ எடுத்த ரசிகை பணி நீக்கம்!

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த அஜித்தை விடியோ எடுத்த தனியார் மருத்துவமனையின் பெண் ஊழியர்...

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 11:22 am

DIN

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த அஜித்தை விடியோ எடுத்த தனியார் மருத்துவமனையின் பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் மே மாதம் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனைக்குள் நுழையும் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த விடியோவை எடுத்தவர் மருத்துவமனை ஊழியரும் அஜித்தின் ரசிகையுமான ஃபர்சானா. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து செல்பியும் எடுத்துக்கொண்டார். 

சமூகவலைத்தளங்களில் விடியோ வெளியானதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த மருத்துவமனை நிர்வாகம், ஃபர்சானாவைப் பணியிடை நீக்கம் செய்தது. 

இதையடுத்து அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ஃபர்சானா உதவி கோரினார். ஷாலினியின் பரிந்துரையால் ஃபர்சானாவுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. எனினும் சில நாள்களில் ஃபர்சானா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அஜித்தை நேரில் சந்திக்க உதவும்படி அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் உதவி கோரினார் ஃபர்சானா.

இந்நிலையில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஃபர்சானா. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என அறியப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.