மூன்று தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் படம்: ஆகஸ்டில் வெளியாகிறது!
மூன்று தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் நடித்த மரக்கார் படம் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகிறது.


மூன்று தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் நடித்த மரக்கார் படம் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகிறது.
தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக ’மரக்காா் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்கிற மலையாள படம் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
மரக்காா் படம் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...