பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கரோனா பாதிப்பு
ரசிகர்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.


பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2003-ல் கங்கோத்ரி என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அல்லு அர்ஜுன். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர். ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லு அர்ஜுன். இதுபற்றி அவர் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...