டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

'சார்பட்டா பரம்பரை' பற்றி அன்றே பேசிய நடிகர் நாகேஷ் - விடியோ பகிரும் ரசிகர்கள்

பழைய படம் ஒன்றில் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை குறித்து பேசியிருக்கும் விடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.  

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 7:25 am

DIN

பழைய படம் ஒன்றில் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை குறித்து பேசியிருக்கும் விடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, பசுபதி, ஐான் விஜய், கலையரசன், சஞ்சனா, ஐான் கொக்கேன், அனுபமா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பாராட்டி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

1970களில் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டை போட்டியில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

இந்த நிலையில் நடிகர் நாகேஷ் சார்பட்டா பரம்பரை குறித்து பேசும் பழைய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவில் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப நாயக்க பரம்பரைக்கும் சண்டை என்பது போல் வசனம் பேசுகிறார். இதனை அன்றே கணித்தார் நாகேஷ் என இந்த விடியோவை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.