சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வைரலாகும் 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல் 

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில்  ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  தயாராகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

News image
வைரலாகும் 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல் 
Updated On :13 ஆகஸ்ட் 2021, 12:14 pm

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில்  ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  தயாராகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்  படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் 'தாக்கோ தாக்கோ மேகா' என்கிற முதல் பாடலை  இன்று மதியம் வெளியீடு செய்திருந்தார்.

ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் பாடிய அப்பாடல் வெளியான 6 மணி நேரத்தில் தெலுங்கில் மட்டும்  50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ட்விட்டரில் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அந்தப் பாடலைப் பகிர்ந்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் 'ஓடு ஓடு ஆடு' என்கிற வரியில் ஆரம்பமாகும் இப்பாடலை பென்னி தயால் பாடியிருக்கிறார்..

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை  இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.