சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இணையத்தில் வெளியான சண்டைக் காட்சி - புஷ்பா படக்குழுவினர் அதிர்ச்சி

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்   ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  உருவாகி வரும்  ' புஷ்பா' திரைப்படம் 

News image
இணையத்தில் வெளியான சண்டைக் காட்சி - புஷ்பா படக்குழுவினர் அதிர்ச்சி
Updated On :17 ஆகஸ்ட் 2021, 7:09 am

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்   ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  உருவாகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் படத்தின் முதல் பாடலை படத்தின்  இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த வெள்ளிக்கிழமை  மதியம் வெளியீடு செய்திருந்தார்.

வெளியான மூன்று நாட்களில் இப்பாடல்  1.50 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிற நிலையில் கிருஸ்துமஸ் அன்று வெளியாகும்  புஷ்பா திரைப்படத்தின்  எடிட்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் சில  சண்டைக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதுகுறித்து தயாரிப்பு நிர்வாகம் புலனாய்வுத் துறையில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். எடிட்டிங் பணியின் போது காட்சிகளைத்  திருடி இணையத்தில் வெளியிட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் படத் தயாரிப்பாளர் காவல்துறையிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.