ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தான் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இயக்குநர்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை மாற்றிக் கூறியதாக வெளிப்படையாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:15 am

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை மாற்றிக் கூறியதாக வெளிப்படையாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். 

கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது. 

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படம் தோல்வியடைந்தாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை இந்தப் படம் மறு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகும்போதும், மக்கள் வெள்ளத்தால் புதிய படத்தைப் போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக காணப்படும். 

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக கடந்த வாரம் செல்வராகவன் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

இந்த நிலையில் அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான பட்ஜெட் ரூ.18 கோடி தான். ஆனால் படத்தின் மீதான மதிப்பை அதிகரிக்க படத்துக்கான பட்ஜெட் ரூ.32 கோடி என அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள் தனம். இந்தப் படம் படத்தின் உண்மையான பட்ஜெட் வசூலாகிவிட்டது. பொய் சொல்லக்கூடாது என கற்றுக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.