வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இயக்குநர் ஹரி - அருண் விஜய் இணையும் படம்: பிரகாஷ் ராஜிற்கு பதிலாக வேறு நடிகர்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜிற்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

DIN

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார். 

ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் வல்லவர் ஹரி. இயக்குநர் ஹரியின் படமும் சரி, அவர் படமாக்கும் விதமும் சரி மிக வேகமாக இருக்கும். தற்போது அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் ஹரி. 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவருக்கு கையில் அடிபட்டு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 

இதனால் அவருக்குப் பதிலாக இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி நடிக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரியுடன் சமுத்திரக்கனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அருண் விஜய்யின் அண்ணனாக நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.